Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

II

இராணுவத்தினரின் அவல நிலை  நம்மை காக்க பனியோ வெயிலோ இல்லை கடும் பனிக் காற்றோ அதை பொருட்படுத்தாமல் , எல்லையிலே பணியாற்றும் நமது இராணுவத்திற்...

இராணுவத்தினரின் அவல நிலை

 நம்மை காக்க பனியோ வெயிலோ இல்லை கடும் பனிக் காற்றோ அதை பொருட்படுத்தாமல் , எல்லையிலே பணியாற்றும் நமது இராணுவத்திற்கு நமது அரசாங்கம் மிக நல்ல மரியாதை அளிக்கிறது. விடுமுறையில் வீடு திரும்பும் இராணுவ வீரர்கள் சந்திக்கும் கஷ்டங்கள்தான் எத்தனை ? இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் எந்தவித வசதிகளும் இல்லை.  முன்பதிவு செய்யாமல் செல்லும் பயணிகள் பெட்டிப் போல்தான் இவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டியும் . அந்த வண்டியில் வரும் எந்த ஒரு உணவுப் பொருட்களும் இந்த பெட்டிக்கு போகாது. வண்டி ஏதாவது ஒரு நிலையத்தில் நிறுக்கும் பொழுது இவர்கள் சென்று வாங்கி வரவேண்டும் . இன்னும் சொல்லப்போனால், காற்றுகூட அந்த பெட்டியில் புக இயலாது. அவ்வளவு கூட்டம் இருக்கும் .  ஒரு வேலையும் செய்யாத அரசியல் வியாதிகளுக்கு எத்தனையோ சலுகைகள். தனது உயிரை பொருட்படுத்தாமல் நம்மைக் காக்க போராடும் இராணுவ வீரர்களுக்கு இப்படி ஒரு கேவலமான நிலை. என்று திருந்தும் இந்த பாரத நாடு ???

ஆட்டோ கட்டணங்கள்:

டெல்லி சென்றபொழுது , டெல்லியில் நான் கண்ட ஒரு நல்ல விசயம், ஆட்டோ கட்டணங்கள் . சென்னை போன்று சண்டைபோடும் ஆடோக்கரர்கள் அங்கு இல்லை. கட்டணமும் மிகக் குறைவுதான். சென்னையை விட பாதி கட்டணம்தான் அங்கு கேட்கின்றனர் . இறங்கும் பொழுது அதிகக் கட்டணம் கேட்டு தகராறு செய்வது இல்லை. இதற்கு காரணம் அங்கு ஆடோக்களில் உபயோகிக்கப்படும்  இயற்கை எரிவாயுதான் என்று சொல்கின்றனர். சென்னையிலும் இந்த மாற்றம் மிக அவசியம். காற்றும் மாசடையாமல் இருக்கும் கட்டணைமும் குறைவாக இருக்கும். நமது அரசாங்கம் மாற்றத்தை கொண்டு வருமா ??

செயற்கைப் பால் :

ராஜஸ்தானில் ஒரு சில இடங்களில் இந்த செயற்கைப் பால் உபயோகிக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துணி துவைக்கும் பவுடர்களில் தண்ணியை கலந்தால் பால் மணம் வருகின்றதாம் அதனால் அதை பால் என்று கூறி விற்கின்றனர். பொதுவாக ரயில் நிலையங்களில் இந்த மோசடி அதிகம் நடைப்பெறுகிறது. எனவே அங்கு செல்லும் மக்கள் கவனமாக இருங்கள்.



LK

18 கருத்துகள்

Ananya Mahadevan சொன்னது…

// துணி துவைக்கும் பவுடர்களில் தண்ணியை கலந்தால் பால் மணம் வருகின்றதாம்// அவ்வ்...
குரூப் குரூப்பாத்தான் கிளம்பி இருக்காய்ங்க! எல்லாரும் பார்த்து பத்திரமா இருந்துக்கணும்.

வார்னிங் குடுத்ததுக்கு தாங்கீஸ்!

Ananya Mahadevan சொன்னது…

ராணுவ வீரர்களுக்கு செளகர்யமாக பிராயணம் செயவதில் இவ்ளோ அல்லல்கள் இருக்கா?

உணவு விஷயத்தில் அவர்கள் ரயில்வே பேண்ட்ரியிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்பதே என் கருத்து. மஹா மட்டமான சாப்பாடு ரயிலில் தயாரிக்கப்படுகிறது. காஃபி டீ போன்ற பானங்களும் அதே நிலை தான். அந்த விதத்தில் அவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் நல்ல சாப்பாடு சாப்பிடுகிறார்கள் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியே..

காத்து புகாத பெட்டியா? ரொம்ப தப்பாச்சே... சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பார்களா? படிப்பவர்கள் வோட்டுப்போட்டு இந்த கட்டுரையை பிரபலப்படுத்துங்கள். நாட்டுக்கு உயிர் கொடுக்கும் தோழர்கள் நிலை உயர ஏதுவாக இருக்கட்டும்.
பகிர்வுக்கு நன்றி!

சாந்தி மாரியப்பன் சொன்னது…

கலப்படப்பால் இங்கே குடிசைத்தொழிலாவே பண்றாங்கப்பா. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கவேண்டியிருக்கு. ராணுவ வீரர்களுக்கான பெட்டிகளை பூனாவில் வைத்து பார்த்ததுண்டு. அவங்களுக்கு சாப்பாடு போகாதுங்கறது இப்பத்தான் கேள்விப்படறேன்.

ஜெய்லானி சொன்னது…

ஆண்ட்டி அநன்யா மஹாதேவன் கருத்துக்கு ஒரு பெரிய்ய ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

தக்குடு சொன்னது…

ahaaaa! vanthavodaney strt muzikkaa??...:)))

எல் கே சொன்னது…

@அநன்யா மஹாதேவன்
இன்னும் இருக்கு, ஒரு சில கெமிக்கல்ஸ் போட்டு பால் ரெடி பண்றாங்க. அதபத்திஸ் ஈகிரம் இன்னொரு பதிவு போடறேன்

நன்றி

@சாரல்
ஆமாங்க. முன்பதிவு இல்லாத பேட்டிகள் கூடத்தான் இவங்க பெட்டியும் இருக்கும். உணவு வகைகள் அங்க போகாது

@ஜெய்லானி

நன்றி ஜெய்


@தக்குடுபாண்டி
ஆமாம் தம்பி

Asiya Omar சொன்னது…

உங்க கூட்டு தகவல் எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டியது.டெல்லி ஆட்டோ தகவல் மாதிரி இங்கு டாக்ஸியில் ஏறி உட்கார்ந்தால் ஃபிக்ஸ்ட் ரேட் ஏறி,பயமில்லாமல் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கலாம்.
ராணுவ வீரர்களுக்கு நம் நாட்டில் இந்த அளவு மரியாதை தானா?ஆச்சரியம்.
இந்த கலப்படம் தண்ணீர் தொடங்கி எல்லாத்திலேயும் தான் இருக்கு,இந்த பஸ் ஸ்டாப்,ரெயில்வே ஸ்டேஷன் எங்கும் தைரியமாக பொருட்கள் வாங்கி சாப்பிட முடியாது.ஜாக்கிரதையாகத்தான் இருக்கனும்.
எல்.கே இன்னும் தகவல் சொல்லுங்க.

Kousalya Raj சொன்னது…

நல்ல பதிவு. நேரில் பார்த்ததில் மனதை பாதித்ததை, பிடித்ததை எங்கள் முன் வைத்தது அருமை.

பெயரில்லா சொன்னது…

கள்ளி பால் தவிரே மற்றவை அனைத்தும் சந்தைக்கு வந்து விட்டது ...எல்லாரும் கவனமாக செயல் பெடுவது அவசியம்

எல் கே சொன்னது…

@ஆசியா
இன்னும் இருக்கு . இராணுவமாவது பரவாயில்லை. துணை ராணுவ படைக்கு இத விட கேவலமான மரியாதையை தராங்க.
உங்க ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி

@கௌசல்யா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@சந்தியா
என்ன பண்ண சந்தியா
நம்ம நாட்டுல போலிகளுக்குதான் மரியாதை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கலப்பட பால் ராஜஸ்தானை விட உத்திர பிரதேசம், ஹரியானாவில் அதிகம். தில்லியில் இருந்து உத்திரபிரதேசத்தில் எங்கு சென்றாலும் தேநீர் அருந்துவதை தவிர்த்தல் நலம். தில்லி வந்த போது சந்திக்க இயலவில்லை. நானும் கொஞ்சம் அலுவலகத்தில் பிஸி.

ஜெயந்தி சொன்னது…

சென்னையிலயே இப்போ நிறைய டூப்ளிகேட் உணவுப்பொருட்களைப் பிடிக்கிறார்கள். எது சாப்புடதுனாலும் பயந்து பயந்துதான் சாப்பிடனும் போல.

எல் கே சொன்னது…

@வெங்கட்
அதேதான் பிரச்சனை. எங்கயும் வெளில போகல. சரியாய் இருந்துச்சி. அடுத்த முறை சந்திப்போம்

@ஜெயந்தி
ஆமாங்க. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

சுந்தரா சொன்னது…

ராணுவத்தில் இருப்பவர்களுக்கு உரிய வசதிகள் செய்துதரவேண்டியது ரொம்ப அவசியம். சம்பந்தப்பட்டவர்கள் கவனிச்சா நல்லது.

//துணி துவைக்கும் பவுடர்களில் தண்ணியை கலந்தால் பால் மணம் வருகின்றதாம்//

காலாவதி மருந்துகள்,உணவுப்பொருட்கள் வரிசையில அடுத்தது இதுவா...

எச்சரிக்கைக்கு நன்றி!

பெயரில்லா சொன்னது…

நீங்க வித்தியாசமான விஷயங்களை தேடி பிடிச்சுத் தான் எழுதுவேன்னு சபதம் ஏதாவது எடுத்திருக்கீங்களா? உங்க பதிவு எல்லாத்திலும் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும் என்று அலட்சியப்படுத்தாது தொடர்ந்து எழுதறீங்களே. நன்றி.

இராணுவ வீரர்களைப் பற்றிய விடயம் புதிது. உலகிலேயே 4வது வல்லரசான இந்தியாவில் எல்லா வசதியும் செய்து கொடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன். =((

டாக் ஏதாவது போடுங்களேன். கூட்டு 1 ஐ தேடிப்பிடிக்க முன்னர் மூச்சு முட்டுது.

எல் கே சொன்னது…

@சுந்தரா

வடக்கே இந்த செயற்கை பால் ரொம்ப நாளா இருக்கு

@அனாமிகா
அப்படிலாம் ஒரு சபதமும் இல்லை. எனக்கு தெரிஞ்ச விசயங்களை மத்தவங்களுக்கு சொல்றேன்.

நீங்க கேட்டப்படி tag போட்டாச்சு

SathyaSridhar சொன்னது…

Mr.LK eppadi sugam ennala unga post ukku udane comment panna mudialai sila internet probs inga...

Nalla informative aana post ithu,

1.Arasiyal viyathigal nalla sonnenga paa, raanuva veerargalukku kandippa niraya salugaigal tharanum neenga sonna maathiri onnume seiyama udambha kashtap paduthikkatha arasiyal viyathigaluku evvloe evvloe salugaigal border la veyilum paniyum paarkama udamba varuthi kittu naata kaakira veerargalukku onnum kidaithhu...naama inga ipdi solli kastatha thirthukkathaan mudiyum itha ethirthu ellarum onnu koodi keta apram thaan nadakkum antha onna koodara otrumai manap paanmai innum India la valarala paa... Naan solrathu corect ah thappa..

Ippa thaan enakku terium intha maadiri ellam fraud pandrangala paal la,,hmmm athukku thaan en amma eppaume train la poegum poedhu engalukku thaniya saapda kudikka ellam veetla irunthae kondu varuvaanga..

எல் கே சொன்னது…

i saw in ur blog itself abt the internet problem u had. no issues. as u said most of the north indian families carry water and food as i seen recently